சென்னையில் முதன் முறையாக தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலி

0 3635
சென்னையில் முதன் முறையாக தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கொண்டித்தோப்பைச் சேர்ந்த அவர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

சென்னையில் முதன் முறையாக தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கொண்டித்தோப்பைச் சேர்ந்த அவர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு கடந்த 7ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், பின்னர் அறிகுறிகள் குறைந்திருப்பதாக 9ஆம் தேதி காலையில் சூரப்பட்டு வேலம்மாள் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

அன்றிரவே உடல்நிலை மோசமானதால் மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

தூய்மை பணியாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுள் ஒருவர் முதன்முறையாக பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments