கொரொனா : பொருளாதார மறுகட்டமைப்பு, சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை - மு.க.ஸ்டாலின்
கொரோனாவின் தாக்கம் மக்களை மேலும் பாதிக்காத வகையில், பொருளாதார மறுகட்டமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தின் மீதான கடுமையான தாக்கம் குறித்து ஆராய்ந்து, அ.தி.மு.க. அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் டாக்டர். சி.ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மீனவர்களின் பிரதிநிதிகளோ சட்டமன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ இடம்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பணியாளர் குறைப்பு, வேலை இழப்பு என்ற அச்சம் பெருகி வரும் நிலையில் இந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள “ஆய்வு வரம்புகள்” வரி வருவாயைப் பெருக்குவதில்” மட்டுமே அரசு கவனம் செலுத்துவதை காட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈராண்டுகளுக்கு #MPLADS ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது.
— M.K.Stalin (@mkstalin) May 9, 2020
எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா?
மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக! pic.twitter.com/iHcSGkFFVi
Comments