டெல்லியில் புழுதிக் காற்றுடன் பெய்த கனமழை

0 1475
கோடை வெயில் கொளுத்தும் டெல்லியில் திடீரென புழுதிக் காற்றுடன் கன மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

கோடை வெயில் கொளுத்தும் டெல்லியில் திடீரென புழுதிக் காற்றுடன் கன மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

டெல்லியில் கோடை காலம் துவங்கி வெப்பநிலை 40 டிகிரியை தொட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெரும் வேகத்தில் புழுதிக் காற்று வீசியது. அதைத் தொடர்ந்து கனமழையும் பெய்தது.

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் பஞ்சாபிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளான கில்ஜித்-பல்டிஸ்தான், முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments