சென்னையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைவு
சென்னையில் இரு மடங்காக உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை, வரத்து அதிகரிப்பின் காரணமாக கணிசமாக குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் எதிரொலியாக, கடந்த 3 நாட்களாக சில்லறை விற்பனையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்ததின் காரணமாக, விலையும் குறைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 60 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆகவும், கத்திரிக்காய் 80 ரூபாயில் இருந்து 40 ரூபாய் ஆகவும் குறைந்துள்ளது.
Comments