மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களுடன் கொச்சி வந்தது ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல்
மாலத்தீவில் இருந்து இந்தியர்கள் 698 பேரை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வா வந்தடைந்தது.
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஆபரேசன் சமுத்திர சேது என இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் வந்துள்ளது. அதில் இருக்கும் 698 இந்தியர்களில் 19 பேர் கர்ப்பிணி பெண்கள் ஆவர்.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அதன்படி பரிசோதனை, தனிமைபடுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டபிறகே, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்படுகிறது.
#WATCH Kerala: INS Jalashwa arrives at Kochi Harbour bringing back 698 Indian nationals from Male, Maldives. According to the Indian Navy, there are 19 pregnant women among the 698 Indian nationals. #OperationSamudraSetu pic.twitter.com/ZTUjQ0hKDJ
— ANI (@ANI) May 10, 2020
Comments