ஊரடங்குக்கு பிறகு முதல்வாரத்தில் தொழிற்சாலைகளை சோதனை ரீதியில் இயக்க வேண்டும்: மத்திய அரசு
ஊரடங்குக்கு பிறகு செயல்படத் தொடங்கும் தொழிற்சாலைகளை முதல்வாரத்தில் சோதனை அடிப்படையில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் ரசாயன ஆலையில் இருந்து விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கால் மூடப்பட்டு கிடந்த ஆலையை முழு அளவில் இயக்கியதே விசவாயு கசிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்குக்கு பிறகு செயல்படும் ஆலைகளை இயக்குவது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் ஆலைகளில் 24 மணி நேர சானிடைசிங் வசதியை ஆலைகள் உறுதிப்படுத்த வேண்டும், தொழிலாளர்கள் அதிகம் வரும் இடங்களான சாப்பாட்டு அறை, பொதுமேஜையை ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments