ஊரடங்கால் 3 வயது குழந்தையுடன் 900 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற தாய்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு குழந்தையுடன் பெண் ஒருவர் 900 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அங்குள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்த கணவரும், வீட்டு வேலை செய்து வந்த மனைவியும் ஊரடங்கால் வேலையிழந்துள்ளனர்.
வருமானமின்றி தவித்தவர்கள் தங்கள் சொந்த ஊரான அமேதிக்கு செல்ல முடிவெடுத்து 900 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளனர். தனது 3 வயது மகளை கொரோனாவிலிருந்து காக்கும் பொருட்டு தாய் ருக்சானா 900 கி.மீட்டர் நடந்தே சென்றுள்ளார்.
Comments