சிக்கிம் எல்லையில் இந்திய-சீன துருப்புக்கள் இடையே கைகலப்பு
சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்திய சீன துருப்புக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடல்மட்டத்தில் இருந்து 16000 அடி உயரத்தில் உள்ள இந்த கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியான நாக்குலாவில் நேற்று சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் சுமார் 20 பேர் தடுக்க முயன்றனர்.
இதை அடுத்து இரு தரப்புக்கும் சிறிது நேரம் கைகலப்பு ஏற்பட்டது. சீன தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு படைப்பிரிவு கமாண்டர்களும் கலந்து பேசி பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டோக்லாம் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்கள் பூட்டான் எல்லையில் அத்துமீறி வந்ததால் ஏற்பட்ட பதற்றம் 73 நாட்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Comments