வெளிநாட்டு ஆயுதக் கொள்முதலை விட உள்நாட்டு உற்பத்தியே மேல்-ராணுவத் தலைமைத் தளபதி
வெளிநாட்டில் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதை விட உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மேக் இன் இந்தியா திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 நோயின் தாக்கம் அனைவரையும் பாதித்துள்ளது. இதில் ஆயுத இறக்குமதிகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். எல்லைகளை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
கொரோனா பாதிப்பால் நாட்டின் நிதிநிலை தேக்கம் காரணமாக வெளிநாட்டு ஆயுதக் கொள்முதல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில் பிபின் ராவத்தின் கருத்து வெளியாகியுள்ளது.
Comments