வாயுக்கசிவு தொடர்பான விபத்துக்கு மன்னிப்புக் கேட்டது எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டு மனித உயிர்கள் பலியானதற்காக, எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
சென்னையில் உள்ள தென்கொரிய துணைத் தூதரகம் மூலம் ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சேதத்தின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும், அதற்கான உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதற்காக சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதால் 2 நாட்களில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments