மதுக்கடைகளை 13 சதவீதம் குறைக்க ஆந்திர அரசு உத்தரவு
ஆந்திராவில் மதுபானங்களின் விலையை 75 சதவீதம் வரை உயர்த்திய அரசு, மதுக்கடைகளை 13 சதவீதம் குறைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. மதுக்கடைகளை குறைக்கவும் மது அருந்துவோரை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுபானங்களின் விலையை 75 சதவீதம் வரை உயர்த்துவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 4 ஆயிரத்து 380 ஆக இருந்த மதுக்கடைகள் இரண்டாயிரத்து 934 ஆக குறைக்கப்பட்டன. இது மொத்த எண்ணிக்கையில் 33 சதவீதமாகும். இதே போல் பார்களையும் மூட உத்தரவிட்டதன் மூலம் பார்களின் எண்ணிக்கையும் 40 சதவீதம் குறைந்தது.
Comments