சித்த மருந்துகள் வழங்கி சிறப்பு சிகிச்சை மேற்கொண்ட சித்தமருத்துவர்..கையை கொடுக்கும் சித்த மருத்துவம்

0 16674
கொரோனா நோயாளிகளுக்கு கை கொடுத்த சித்த மருந்துகள்

சென்னையை சேர்ந்த சித்தமருத்துவர் வீரபாபு என்பவர் அங்கில மருத்துவத்துடன், சித்த மருந்துகளை இணைத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 நோயாளிகளை 4  நாட்களில் குணப்படுத்தி உள்ளார். இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவத்தை மட்டும் தனி சிகிச்சையாக அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே இருக்க நோயாளிகளை கட்டுப்படுத்த புதிய மருத்துவ முறையை சுகாதாரத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வைஷ்ணவா கல்லூரியில் உள்ள மையத்தில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறைகளுடன் சித்த மருந்துகள் வழங்கி சிறப்பு சிகிச்சை மேற்கொண்டார் சித்தமருத்துவர் வீரபாபு.

ஸ்டான்லி டீன் பாலாஜியின் மேற்பார்வையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த சிகிச்சை முறையில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் ஆங்கில மருந்துகளுடன் இருமுறை சித்தமருத்துவ தேனீர் , மூன்று முறை கசாயம், இருவேளை கபசுரகுடி நீர் போன்றவற்றை பருகி வந்தவர்களில் 15 பேருக்கு வியாழக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் 4 நாட்களில் கொரோனா தொற்று நீங்கியதாக நேற்று முடிவு வெளியானது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக சித்த மருந்துகளால் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமாவதை கண்ட மருத்துவர்கள், கொரோனா நோயாளிகள் சிலரை தனியாக சித்தமருந்துகள் மட்டும் கொடுத்து அவர்களின் உடல் நிலையை ஆய்வு செய்து பார்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனியாக ஆய்வுக்குழு ஒன்றையும் அமைத்துள்ளனர்.

தமிழக அரசின் அறிவுறுத்தல் மற்றும் அரசு மருத்துவர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே சித்தமருந்துகளை பயன்படுத்தி நோயாளிகள் குணம் அடைந்துள்ளதாக தெரிவித்த வீரபாபு, தனியாக சித்தமருந்துகளை மட்டுமே கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் வெளியாகும் முடிவுதான் சித்தமருத்துவத்தின் முழுமையான வெற்றியாகும் என்று தெரிவித்தார்

வீரபாபு தன்னுடைய கசாய பொடிகளை விற்கும் நோக்கில் பணம் கறக்கும் ஆசையில் செயல்படுகிறாரா என்பதை அறிய, சினிமா பிரபலங்கள் தங்களது சித்த மருந்து பொடிகளை கேட்கின்றனர் அவர்களுக்கு கொடுக்க முடியுமா ? என்றதும், சற்றும் பதறாமல் இது அனைத்து மக்களுக்கான பாரம்பரிய மருத்துவமுறை என்றார். தன்னுடைய இந்த கசாயத்துக்கு தேவையான மூலிகை பொருட்கள், எல்லா நாட்டு மருந்துகடைகளிலேயே கிடைக்கும் என்றும், தேவைப்படுவோர் அங்கு சென்று வாங்கி மருந்தை எளிய முறையில் வீட்டில் தயாரித்து பருகலாம் எனவும் தெரிவித்தார்.

கொரோனா சித்தமருத்துவ ஆய்வின் முடிவுகள் சித்தமருத்துவத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளியானால் நிச்சயம் அது நம் பாரம்பரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும்.

அதே நேரத்தில் கோடிகள் புரளும் ஆங்கில மருத்துவத்தை முன்னிருத்தும் சமூகத்தில் சித்தமருத்துவத்தை அவ்வளவு எளிதாக அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்து விடமுடியாது என்பதால் வீரபாபுவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments