தந்தை மரணம் - தாய் கொரோனாவால் பாதிப்பு : 9 வயது மகன் தவிப்பு

0 3703
கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி, தாயார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், திடீரென உயிரிழந்த தந்தையின் உடலுடன் என்ன செய்வது? என தெரியாமல் 9 வயது சிறுவன், தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாம்பாளையம் என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள பழங்குடி இருளர் இன பகுதியில் வசித்த அய்யனார் என்பவர் திடீரென உயிரிழந்து விட்டார்.

அதேநேரம் அவரது மனைவியும், தாயாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தனர்.

தகவல் அறிந்த மருத்துவக்குழுவினர், இறந்த அய்யனாரின் உடலுக்கு மனைவியும், அவரது தாயாரும் அஞ்சலி செலுத்த உதவி செய்தனர். பின்னர் இருவரும் மீண்டும் மருத்துவ மனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். 

தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து சிறுவனுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நிவாரண பொருட் களை வழங்கி,ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments