தகவல் பெறும் உரிமை சட்டம் : இனி, இணைய வழியில் விண்ணப்பம்
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற, இனி இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி, தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத்துறை, இதற் கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொது மக்கள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பங்களை அனுப்புகிற நடைமுறையை எளிமைப் படுத்தும் வகையில், இனி, தகவல் கோரும் விண்ணப்பம் மற்றும் முதலாம் மேல் முறையீட்டு மனுக்களை இணைய வழியில் சமர்பிக்க முடியும்.
பணியாளர் மற் றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் நடத்தப்பட்டு உள்ள முதல் கட்ட சோதனை யை தொடர்ந்து, அடுத்தகட்டமாக பரீட்சார்த்த முறையில் பள்ளிகல்வித்துறையில் அறிமுகப் படுத்தப்படும்.
பரிசோதனையில் கிடைக்கும் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப் படும். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி தகவல் கோருவதற்கான கட்டணம் செலுத்துவதும் இனி இணையவழியில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது
Comments