62 ஆயிரத்தை தாண்டியது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு

0 2719
கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிர்ப்பலி 2 ஆயிரத்தை எட்ட, சுமார் 18 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிர்ப்பலி 2 ஆயிரத்தை எட்ட, சுமார் 18 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

உலுக்கும் கொரோனாவால் உலக நாடுகள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு, உயிரிழப்பு, 731 ஆக உயர்ந்தது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு 7ஆயிரத்து 500 - ஐ நெருங்க, டெல்லியில் 6 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது

தமிழகத்தில் ஒரே நாளில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்தது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 ஐ தாண்ட, பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 300 ஐ தாண்ட, அங்கு உயிரிழப்பு இரட்டை சதத்தை எட்டியது.

உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்ரு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 900 ஐ தாண்ட, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டி விட்டது.

ஜம்மு - காஷ்மீரில் பாதிப்பு 823 ஆக உயர, கர்நாடகாவில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 800 ஐ நெருங்கி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 800 ஐ நெருங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments