அதிகரிக்கும் நோய்த்தொற்று திணறும் மாவட்டங்கள்

0 7438
தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பலருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பலருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 73 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மேலும் 33 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் மட்டும் 83 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை அம்மாவட்டத்தில் 226 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

கோயம்பேட்டில் பணிபுரிந்த 850 பேர் ஊர் திரும்பிய நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோயம்பேடிலிருந்து திரும்பியவர்கள், அவர்களது உறவினர்கள் என ஒரே நாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments