வளர்ந்த நாடுகளின் நிலைமை இந்தியாவுக்கு ஏற்படாது என ஹர்ஷ வர்தன் நம்பிக்கை
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டதை போன்ற மோசமான கொரோனா விளைவுகள் இந்தியாவில் ஏற்படாது என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
வட கிழக்கு மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து அவர் காணொலி காட்சியில் ஆலோசனை நடத்தினார். அப்போது இதைத் தெரிவித்த அவர், அதே சமயம் இனிமேல் தான் மோசமான காலகட்டத்தை சந்திக்க நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதர நாடுகளைப் போல அல்லாமல் கொரானா இறப்பு விகிதம் 3.3 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 29.9 சதவிகிதமாகவும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவை நல்ல அறிகுறிகள் என்ற அவர், தொற்று இரட்டிப்பு ஆவது கடந்த 3 நாட்களாக 11 தினங்களாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 0.38 சதவிகித நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டரில் உள்ளனர் எனவும் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
Comments