தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
தான் எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும், நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த சில நாட்களாகச் சமூக ஊடங்கள் வழியாகச் சிலர் தனது உடல் நலம் குறித்து வதந்தி பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் உடல்நலத்துடன் உள்ளதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறித் தனது உடல்நலம் குறித்த அனைத்து வதந்திகளையும் மறுத்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் தான் தீவிரமாகப் பணியாற்றி வந்ததால் இந்த வதந்தியைக் கண்டுகொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது நலம் விரும்பிகளும், லட்சக்கணக்கான தொண்டர்களும் இது குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்தியதால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியதாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
मेरे स्वास्थ्य की चिंता करने वाले सभी लोगों को मेरा संदेश। pic.twitter.com/F72Xtoqmg9
— Amit Shah (@AmitShah) May 9, 2020
Comments