புயலாக சுழலும் கொரோனா உலக நாடுகள் திணறல்

0 3002
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை நாற்பது லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை நாற்பது லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஐரோப்பா, ஆஸ்திரேலியா என கொரோனா நோய் பரவி ஆயிரகணக்கில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து 13 லட்சத்து 94 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் 23 லட்சத்து 58 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் 48 ஆயிரத்து 400 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.((Gfx 1 out))

 உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 22 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரிட்டனில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி ஆயிரத்து 800ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் பாதிப்பு ஒரு லட்சத்துக்கு அதிகமாக உள்ளது. இதேபோல் மேற்காசிய நாடான ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments