இஸ்ரேலில் உள்ள தெரு ஒன்றுக்கு ரவீந்திரநாத் தாகூரின் பெயரை அந்நாட்டு அரசு வைத்துள்ளது.
ரவீந்திரநாத் தாகூரின் 159ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட வேளையில், இஸ்ரேலில் உள்ள தெரு ஒன்றுக்கு அவரது பெயரை அந்நாட்டு அரசு வைத்துள்ளது.
மேற்குவங்கத்தை சேர்ந்த மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 159ஆவது பிறந்த தினம் கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் அரசு ரவீந்திரநாத் தாகூரை கெளரவிக்கும் வகையில், டெல் அவிவ் நகரிலுள்ள உள்ள தெரு ஒன்றுக்கு அவரது பெயரை வைத்துள்ளது.
இந்தத் தகவலையும், தாகூர் பெயர் வைக்கப்பட்ட தெருவின் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
We honor #RabindranathTagore today and every day, as we named a street in Tel Aviv in memory of his valuable contribution to mankind. pic.twitter.com/ZH826Ot0aP
— Israel in India (@IsraelinIndia) May 7, 2020
Comments