டிரம்ப் மகள் இவாங்காவின் தனி உதவியாளருக்கு கொரோனா தொற்று

0 1729
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் செய்தித் தொடர்பாளர் கேட் மில்லரைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் தனி உதவியாளருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் செய்தித் தொடர்பாளர் கேட் மில்லரைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் தனி உதவியாளருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பின் பணியாளராக இருந்த ராணுவத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலில் கொரோனா உறுதியானது.

இதையடுத்து மைக் பென்சின் செய்தித் தொடர்பாளர் கேட் மில்லருக்கு (kate miller) உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் இவாங்காவின் தனி உதவியாளராக இருந்தவருக்கு நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 2 மாதமாக வெள்ளை மாளிகை வராமல் வீட்டில் இருந்தபடி பணியாற்றிய நிலையில் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டாயம் முகக்கவசம் அணியவும், நாள்தோறும் கொரோனா பரிசோதனை, உடல்வெப்ப அளவு பரிசோதனை மேற்கொள்ள வெள்ளை  மாளிகை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments