அமெரிக்காவில் H-1B அல்லது J2 விசாவில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் செவிலியருக்கு கிரீன் கார்டு வழங்க முடிவு

0 4465
அமெரிக்காவில் H-1B அல்லது J2 விசாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு விரைவில் கிடைக்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் H-1B  அல்லது  J2 விசாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு விரைவில் கிடைக்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  தாண்டவமாடுவதால் மருத்துவப்  பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் கிரீன் கார்டுகளை வெளிநாட்டு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் வழங்குவதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 25000 வெளிநாட்டு செவிலியர்களுக்கும் 15000 மருத்துவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைக்கும். கொரோனா நீண்ட காலம் நீடிக்கும் என கருதப்படுவதால் அமெரிக்காவின் மருத்துவ தேவைகளை ஈடுகட்ட இந்த திட்டம் உதவும் என எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments