வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த 400 படுக்கைகளுடன் சிறப்பு மையம்

0 2767
வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் 400 படுக்கைகளுடன் சிறப்பு மையம் தயாராகி வருகிறது.

இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள், சமையல் கூடம் மற்றும் 3 சுற்றுலா மாளிகைகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுத்தப்படுத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகம் சார்பாக 400 அறைகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments