25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் உயிரினத்தின் படிமம் கண்டுபிடிப்பு

0 1257

சீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினத்தின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அன்ஹூய் மாகாணத்தில் தொல்லியல் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது கார்ட்டோரிங்கஸ் குடும்பத்தைச் சேர்ந்த கடல் உயிரினத்தின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தட்டையான நீண்ட வாலுடன் முதுகில் துடுப்புடன் காணப்படும் இந்த வகை உயிரினம் நீளமான வாயும், அதில் ஏராளமான கோரைப் பற்களையும் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த உயிரினம் அதிகபட்சம் 30 அடி நீளம் வரை வளர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில்தான் கார்ட்டோரிங்கஸ் குடும்பத்தின் கடல் உயிரினத்தின் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் போன்ற உயிரினத்தின் கற்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments