வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டது
வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேகக் கூட்டங்களுக்கு அப்பால் இருளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அந்தக் கிரகத்தில் உள்ள ஒளிரும் பகுதிகள் நெருப்புக் வளையங்கள் போன்று தென்படுவதை முதன்முதலாக படம் பிடித்த விஞ்ஞானிகள் இதனை அதிர்ஷ்டவசமான படம் என்று வர்ணித்துள்ளனர்.
இந்தப் படம் ஹவாய் தீவில் உள்ள ஜெமினி தொலைநோக்கி மூலம் அகச்சிவப்பு அலைகளை உருவாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியான ஹப்பிள் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் சிவப்பாகக் காணப்பட்டவை மலைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சிவப்பு நிறம் கொண்டவை ஒளிரும் பகுதி என்பது தெரியவந்துள்ளது.
Comments