குஜராத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் குஜராத் பயணம்

0 1164
குஜராத்தில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா மற்றும் சுவாசநோய் நிபுணர் மணீஷ் சுரேஜா அகமதாபாத்திற்கு சென்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் கோரிக்கையை ஏற்று இவர்கள் விமானப்படை சிறப்பு விமானத்தில் சென்றனர்.

அகமதாபாத் சிவில் மருந்துவமனையில்  மருத்துவர்களை சந்தித்து கொரோனா சிகிச்சை குறித்த யூகங்களை இவர்கள் வழங்கிய பின்னர் மாநில தலைமைச் செயலரையும் சந்தித்து கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

குஜராத்தில் நாட்டிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையில் 7402 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மாநிலத்தில் இதுவரை 449 பேர் பலியாகி உள்ள நிலையில், சிகிச்சை முறைகளை தீவிரப்படுத்தும் பணிகளை அமித் ஷா முடுக்கி விட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments