மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

0 1513
மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் நிறுவனங்களை இயக்க அனுமதித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.  மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள தன்னைப் போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்களே ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்புக் காலத்தில் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments