பழைய வாகனங்களைக் கழிக்கும் கொள்கை விரைவில் இறுதி செய்யப்படும் - நிதின் கட்கரி
பழைய வாகனங்களைக் கழிக்கும் கொள்கை விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தினரிடம் காணொலியில் கலந்துரையாடிய அவர், பழைய வாகனங்களைக் கழிக்கும் கொள்கை நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் அது விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களைக் கழிப்பதற்கு அதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கொள்கை வாகனத் தயாரிப்புத் துறைக்கு ஊக்கமளிப்பதுடன், தயாரிப்புச் செலவைக் குறைக்கவும் உதவும் என அவர் குறிப்பிட்டார்.
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை உடைப்பதில் இருந்து கிடைக்கும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்டவை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் வாகனங்களின் விலை 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை குறையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Comments