ரூ.400 கோடி வாராக்கடன் வைத்துள்ள நிறுவனம் மீது எஸ்பிஐ வங்கி 4 ஆண்டுகள் கழித்து சிபிஐயிடம் புகார்
வங்கிகளுக்கு 400 கோடி ரூபாய் வாராக்கடன் வைத்துள்ள நிறுவன உரிமையாளர்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி 4 ஆண்டுகள் கழித்து சிபிஐ-யிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியை சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான Ram Dev International Limited உரிமையாளர்கள், எஸ்பிஐ, கனரா, ஐடிபிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் 414 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
2016ஆம் ஆண்டில் இது வாராக்கடன் என வகைப்படுத்தப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரியில் எஸ்பிஐ வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவன இயக்குநர்கள் நரேஷ்குமார், சுரேஷ்குமார், சங்கீதா மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு மோசடி, ஏமாற்று, ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாராக்கடன் என வரையறுக்கப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சொத்துகள் குறித்து 2016ஆம் ஆண்டு அக்டோபரில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போதே அவர்கள் தலைமறைவாகியதுடன் நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும் புகாரில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டு ஓடும் முன், எல்லா சொத்துகளையும் விற்றுவிட்டதால், இனி கடனை வசூலிப்பது சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகு, எஸ்பிஐ வங்கி சிபிஐ அமைப்பை அணுகியதாக கூறப்படுகிறது.
Comments