சென்னையில் காய்கறிகளின் விலை 3-வது நாளாக உயர்வு
சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறிகளில் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையாக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதின் எதிரொலியாகவும், வரத்து குறைந்ததின் காரணமாகவும், காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் உள்ள காய்கறிகளை அதிகளவில் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், ஒவ்வொரு காய்கறியும் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், 100 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், வெண்டைக்கய் 60 ரூபாயில் இருந்து 130 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments