கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மாமனார், மருமகன் படுகொலை

0 4308

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மாமனார், மருமகன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாசரேத் அடுத்த உடையார்குளத்தை சேர்ந்த பலவேசம் என்பவர், வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை கொடுத்து கடன் வாங்கியதாகவும், வட்டி மற்றும் அசல் பணத்தை கொடுத்த பின்பும் சண்முகசுந்தரம் வீட்டு பத்திரத்தை திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் பலவேசம் அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர். இதையடுத்து நேற்றிரவு பலவேசத்தின் வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரத்தின் உறவினர்கள் உள்ளிட்ட கும்பல் அங்கு பேசிக் கொண்டிருந்த பலவேசத்தை வெட்டிய நிலையில், தடுக்க வந்த அவரது மருமகன் தங்கராஜையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments