ஹிஸ்புல்லுக்கு உதவியாக இருந்த 2 பஞ்சாப் சகோதரர்கள் சுற்றி வளைப்பு
தீவிரமாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த பஞ்சாப் சகோதரர்கள் இரண்டு பேர் அரியானா மாநிலம் சிர்சாவில் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் கமாண்டர் ரியாஸ் நாக்கூவின் வலது கரம் என கூறப்படும் ஹிலால் அகமதுவின் கட்டுப்பாட்டில் இந்த இரண்டு பேரும் செயல்பட்டு வந்தனர். ஹிஸ்புல் இயக்கத்திற்கு பணம் விநியோகம் செய்து வந்த இவர்களை பிடித்திருப்பது தீவிரவாதவேட்டையின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பிடிபட்ட ரஞ்சித் ராணா, ககன்தீப் ராணா ஆகிய இந்த இருவரும் சிர்சாவின் மிகப்பெரிய போதைமருந்து கடத்தல்காரர்கள் என கூறியுள்ள பஞ்சாப் டிஜிபி திங்கர் குப்தா,கடந்த ஆண்டு அட்டாரியில் 532 கிலோ ஹெராயின் பிடிபட்ட வழக்கில் இவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்
Comments