புவி வெப்பமடைவதால் 2100ஆம் ஆண்டில் கடல்மட்டம் 1.3 மீட்டர் உயரும் - ஜெர்மனி அறிவியலாளர்கள்
புவி வெப்பமடைவதால் 2100ஆம் ஆண்டில் கடல்மட்டம் ஒரு மீட்டருக்கு மேல் உயரக் கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள பருவநிலைத் தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அறிவியலாளர்கள், புவி வெப்பமடைதல் குறித்து ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். 2100ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை இப்போதுள்ளதைவிட மூன்றரை டிகிரி செல்சியல் அதிகரித்து, அதன்விளைவாகக் கடல்மட்டம் 130 சென்டிமீட்டர் உயர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.
2300ஆம் ஆண்டில் அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனிப்பாளங்கள் உருகிக் கடல் மட்டம் 5 மீட்டருக்கு மேல் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டினர் அதாவது 77 கோடிப் பேர் கடலின் உயர் அலை மட்டத்துக்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
Comments