ஊரடங்கு காலத்தில் உயர்நீதிமன்றத்தில் 341 வழக்குகள் முடித்து வைப்பு
ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 732 வழக்குகளில் 341 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் மிக முதன்மையான அவசர வழக்குகளை மட்டும் காணொலி மூலம் நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். மார்ச் 26ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 732 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவற்றில் 341 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில் 105 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில் பத்தாயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
Comments