கர்நாடகாவில் ரெஸ்டாரெண்டுகள், பார்கள், பப்புகளில் மதுவிற்க அனுமதி

0 1553

கர்நாடகா மாநிலத்தில் ரெஸ்டாடென்டுகள், பார்கள் மற்றும் பப்புகளில் இன்று முதல் மதுவிற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு கிடந்த மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் அதிக அளவில் மதுவாங்குகின்றனர். இதனால் மதுவிற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ரெஸ்டாரெண்டுகள், பார்கள், பப்புகளில் மதுவிற்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் மே 17ம் தேதி வரை ரெஸ்டாரெண்டுகள், பார்கள், பப்புகளில் சில்லரை விலையில் மதுவிற்க அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு வைத்து குடிக்க அனுமதி கிடையாதென்றும், மதுபிரியர்கள் வாங்கி செல்லும் வகையில் விற்பனை இருக்க வேண்டுமென்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments