சென்னையில் கொரோனா பாதிப்பு 3,043ஆக அதிகரிப்பு

0 2050
சென்னையில் கொரோனா பாதிப்பு 3,043ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 43ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கடுத்து அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 490 பேரும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 477 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 343 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 256 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 233 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்து அதிகபட்சமாக தண்டையார் பேட்டை மண்டலத்தில் 207 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments