விசாகப்பட்டினம் நச்சுவாயுக் கசிவு குறித்து வல்லுநர் குழு விசாரிக்க வேண்டும் - முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
விசாகப்பட்டினம் நச்சுவாயுக் கசிவு தொடர்பாக அறிவியல் வல்லுநர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினம் எல்ஜி வேதி ஆலையில் ஸ்டைரீன் என்னும் நச்சுவாயு கசிந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்குச் சந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில், அறிவியல் வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து எல்ஜி வேதி ஆலையில் நச்சுவாயு கசிந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மற்றும் உலக அளவிலான வல்லுநர்களைக் கொண்டு, நச்சுவாயு விபத்தால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பை மதிப்பிட வேண்டும் என்றும், இது பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உதவியாக இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
Comments