டெல்லியில் மதுக்கடைகள் முன்பு ஹெல்மெட்டுகள் மூலம் இடம்பிடித்த குடிமகன்கள்
தலைநகர் டெல்லியில் மதுகடை முன்பு ஹெல்மெட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வைத்து குடிமகன்கள் இடம்பிடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக மதுகுடிக்க முடியாமல் தவித்த குடிமகன்கள், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியடைந்து நீண்ட வரிசையாக காத்திருந்து மதுவாங்கி குடித்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் முன்பு கடந்த சில நாள்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடி உள்ளது. இந்நிலையில் டெல்லியின் கோல்மார்க்கெட் பகுதியிலுள்ள மதுக்கடைகள் முன்பு அக்கடைகள் திறக்கப்படும் முன்பே திரண்ட குடிமகன்கள், வரிசையாக ஹெல்மெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பேக்குகள் உள்ளிட்டவற்றை வைத்து இடம்பிடித்துள்ளனர். இக்காட்சியை அங்கிருந்தோர் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.
Comments