அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி சீல்வைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிரிலோஷ் குமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு உத்தரவு காலத்தில் மூட வேண்டும் என்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களும் இழுத்து மூடப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டு வெல்டு செய்யப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடைகளில் இருந்து எந்த திருட்டு முயற்சியும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments