தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு : ஆன்லைன் மூலமாக மட்டும் விற்க அனுமதி
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலமாக மட்டும் மது வகைகளை விற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 3வது முறையாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் சென்னை தவிர்த்து மற்ற னைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்து இருந்தது.
குறிப்பாக, சமூக இடைவெளிகளை முறையாக பின்பற்ற வேண்டும், மது வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை தகவல்களை பெற வேண்டும், மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியாநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Madras High Court orders shut down of liquor shops in Tamil Nadu, just 2 days after opening. Social distancing was not followed outside TASMAC shops.#MadrasHC #TASMAC #TASMACShops #LiquorShops #LiquorFreeIndia #wineshops #Madras #Chennai #TamilNadu pic.twitter.com/NzspedIb2z
— India Thinks (@IndiaThinksNews) May 8, 2020
Comments