திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 62 பேருக்கு கொரோனா உறுதி

0 2034
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக இன்று கோயம்பேடு தொடர்புடைய 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக இன்று கோயம்பேடு தொடர்புடைய 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 270-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பெரியபாளையத்தை அடுத்த ஆரணி காவல் நிலைய காவலருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.

சக காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் தொடர்புடைய காவலர் பாதுகாப்புப் பணிக்கு சென்று வந்த இடங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments