அடங்க மறுக்கும் கொரோனா அதிகரிக்கும் நோய்த்தொற்று
சென்னையில் ஒரே நாளில் 399 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் மேலும் 399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
கடலூரில் மேலும் 34 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும் விழுப்புரத்தில் மேலும் 21 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஒரே நாளில் 11 பேருக்கும் காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் தலா 8 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 4 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 3 பேரும், மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் தலா 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி, திருப்பத்தூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு, சிவகங்கை மட்டும் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்களாக உள்ளன. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதியான 6 ஆயிரத்து 9 பேரில், 1589 பேருக்கு கோயம்பேடு தொடர்பால் கொரோனா தொற்று பாதித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#Update
— Greater Chennai Corporation (@chennaicorp) May 8, 2020
399 Covid-19 Positive cases in Chennai today. #Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/r7S4p72lI6
Comments