கிராமங்களில் இணையதளம் கேள்விக்குறியாக இருப்பதால் ஆன்லைனில் பாடம் நடத்துவது இயலாத காரியம் - காமராஜர் பல்கலை.
கிராமங்களில் இணையதளம் கேள்விக்குறியாக இருப்பதால் ஆன்லைனில் பாடம் நடத்துவது இயலாத காரியம் என்றும் ஊரடங்குக்கு முன் நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமராசர் பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மாணவர்களே அதிக அளவில் உள்ளதாகத் தெரிவித்தார்.
நடத்தி முடிக்காத பாடங்களை தவிர்த்துவிட்டு தேர்வுகளை நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து உயர்கல்வித் துறை செயலாளரிடம் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆலோசனை நடத்தி பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
Comments