கோயம்பேட்டால் கருஞ்சிவப்பாக மாறிய கோடம்பாக்கம்

0 4018
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மண்டலங்கள் 5 தான். அவற்றில் கோடம்பாக்கம் மண்டலமும் ஒன்று. சென்னையில் ராயபுரம் தான் அதிக பாதிப்புக்குள்ளான மண்டலமாக இருந்தது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மண்டலங்கள் 5 தான். அவற்றில் கோடம்பாக்கம் மண்டலமும் ஒன்று. சென்னையில் ராயபுரம் தான் அதிக பாதிப்புக்குள்ளான மண்டலமாக இருந்தது.

அதன் பிறகு புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவியது. இந்த நிலையில் இந்த இரண்டு மண்டலங்களையும் விட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகமாகி கோடம்பாக்கம் மண்டலம் பின்னடைவை சந்தித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில் மே 7 -ந் தேதி வரை கோடம்பாக்கம் மண்டலத்தில் 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 448 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 422 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி 53 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மே 7 ஆம் தேதிக்குள் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 461 ஆக அதிகரித்துள்ளது. SPL GFX OUT

கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாவதற்கு கோயம்பேடு பகுதி தான் காரணம். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பால் அந்த பகுதியில் மட்டும் தற்போது வரை 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு மூலம் ஏற்படும் பாதிப்பை உணர்வதற்கு முன்பே அசோக் நகர், வடபழனி, சின்மயா நகர் பகுதிகளில் சில தற்காலிக வியாபாரிகளுக்கு மண்டல அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அவர்கள் கோயம்பேடு சென்று வந்ததன் விளைவாக கொரோனா தொற்று ஏற்பட்டு மற்ற பகுதிகளுக்கும் வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியது.

ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களை போல் நெருக்கமான குடியிருப்பு உள்ள பகுதிகள் கோடம்பாக்கம் மண்டலத்தில் குறைவு. இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 16 வார்டுகளில் 7 லட்சம் பேர் மக்கள் தொகை.

அசோக் நகர், கே.கே.நகர், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை போன்ற முக்கியமான பகுதிகளிலும் இந்த மண்டலத்தில் அடங்கும். கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments