மதுரையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 23 பேர்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 23 பேர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்களை 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அம் மருத்துவமனையில் இருந்து ஏற்கனவே 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று 6 பெண்கள் உட்பட 23 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களை ஆட்சியர், மருத்துவ குழுவினர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
தற்போதைய நிலவரப்படி, ராஜாஜி அரசு மருத்துவமனையில் 32 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
Comments