திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
காய்கறி மொத்த விற்பனைச் சந்தை அமைக்க திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா பரவியதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தை கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது. திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமழிசையில் அமைக்கப்பட உள்ள 200 கடைகளில் 140 கடைகளுக்கான பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.
மீதமுள்ள 60 கடைகளுக்கான கான்கிரீட் தரை, குடிநீர் வசதி, கழிப்பிடம் உருவாக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருமழிசை பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சந்தையை திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலாளர் சண்முகம், சி.எம்.டி.ஏ.உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக இன்று (8.5.2020) தலைமைச் செயலகத்தில், ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/RoS5orpU1v
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 8, 2020
Comments