கொரோனாவால் 2,28,000 கோடி ரூபாயை இழந்த தொழிலதிபர்

0 2800

உலகின் மிப்பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் அதிபரும், ஐரோப்பாவின் நம்பர் ஒன் பணக்காரருமான  பெர்னார்டு அர்னால்டு, ( Bernard Arnault) கொரோனாவால், உலகில் மிகவும் மோசமான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்.

பாரிசில் உள்ள இவரது LVMH நிறுவனம் Dior முதல்  Fendi வரை 70 க்கும் மேற்பட்ட ஆடம்பர பொருள்களை உலகம் முழுதும் விற்கிறது. கொரோனாவால் ஒட்டு மொத்த உலகமும் முடங்கியதை அடுத்து இவரது நிறுவன பங்குகள் 19 சதவிகிதம் வீழ்ந்து, வருமானம் 2,28,000‬ கோடி ரூபாய் குறைந்து விட்டது.

தனிப்பட்ட நபரின் வருமானம் என்ற அளவில் இதுவே உலகில் கொரோனாவுக்கு பலி கொடுக்கப்பட்ட அதிகபட்ச வருமானமாகும். கடந்த 6 ஆம் தேதி நிலவரப்படி, அமேசான் உரிமையாளர் ஜெப் பிசோஸ்-க்கு கிடைத்த லாபத்தின் அதே அளவுக்கு பெர்னார்டு அர்னால்டுக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments