டிக் டாக்கை முந்தி ஏப்ரல் மாதத்தில் 13 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட ZOOM செயலி
ஏப்ரல் மாதத்தில் விளையாட்டு தொடர்பில்லாத செயலிகளில் ஜூம் செயலி உலகில் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேரடியாக சந்திக்க முடியாதோர், ஜூம் செயலி மூலம் குழுவாக உரையாடி வருகின்றனர். இதையடுத்து அதன்பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்சார் டவர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், ஏப்ரல் மாதத்தில் ஜூம் செயலி சுமார் 13 முறையும், டிக் டாக் செயலி சுமார் 10 கோடி முறையும் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் அதிகபட்சமாக 18 புள்ளி 3 சதவீதமும், அமெரிக்காவில் 14 புள்ளி 3 சதவீதமும் ஜூம் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 60 மடங்கு ஜூம் செயலியின் பதிவிறக்க விகிதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments