சென்னையில் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்வு
கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதின் எதிரொலியாக, சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் உள்ள காய்கறிகளை அதிகளவில் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு காய்கறியும் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது.
திருமழிசைக்கு சென்று காய்கறி கொள்முதல் செய்வது இரட்டிப்பு செலவை ஏற்படுத்தும் என்பதால், வேறு வழியின்றி அந்த செலவை ஈடுகட்ட விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 60 ரூபாய்க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.100-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயந்துள்ளது. 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Comments