மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் போரிஸ் ஜான்சன்

0 3383
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது முன்னாள் மனைவி மெரினா வீலரை முறைப்படி விவாகரத்து செய்துள்ளார்.

போரிஸ் ஜான்ஸனும், மெரினா வீலரும் விவாகரத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான நடைமுறைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெரினா வீலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.அவரது தாயார் தீப் சீங் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.1993-ஆம் ஆண்டு முதல் போரிஸ் ஜான்ஸனின் மனைவியாக இருந்த அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு, பதவியில் இருக்கும் இங்கிலாந்து பிரதமர் ஒருவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments